Posted in Blog, Temples

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை

திருச்சிராப்பள்ளி என்றும் அழைக்கப்படும் திருச்சி மாநகரத்தில், பண்டைய மலை பாறைகளில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோட்டை வளாகமான திருச்சி மலைக்கோட்டை (Trichy Malaikottai) மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருச்சி மலைக்கோட்டையின் கட்டமைப்பைப் பார்க்கும் போது, உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தும் முதல்…Continue readingதிருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை

Posted in Blog, Temples

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில்

இந்திய நாடு பெரும்பாலும் கோவில்களால் நிறைந்த நாடு என்று சிறப்பித்து கூறப்படுகிறது. இங்கு காணப்படும் கோவில்களில் பல அவற்றின் துடிப்பான வரலாறு மற்றும் கட்டிடக்கலைக்காக உலகளவில் புகழ் பெற்றவையாக திகழ்கிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள நேர்த்தியான கோவில்களின் மிக அற்புதமான உதாரணங்களில் ஒன்றாக…Continue readingஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில்

திருச்சிராப்பள்ளி மாநகர் பற்றிய ஒரு வழிகாட்டி. (Trichy tourism)

தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ள பழம்பெருமை வாய்ந்த மாநகரம் திருச்சிராப்பள்ளி. இது தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், (Trichy tourist spots) தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான கோவில் நகரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் சிறந்த கலவையான திருச்சி காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருச்சி அதன் வளமான கலாச்சார மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்திற்கு பிரபலமானது. திருச்சி பல முக்கிய கோவில் நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் வரலாற்று இடங்களுக்கான நுழைவாயில் ஆகும்.

திருச்சி அதன் கவர்ச்சிகரமான ஈர்ப்புகளுடன், உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் பயணிகளை தன்னகத்தே ஈர்க்கிறது. சுற்றுலாவுக்காக பயணிகள் இங்கு வரும்போது திருச்சியை சுற்றியுள்ள ஏராளமான கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களை இங்கு தங்கியிருந்து கண்டு ரசிக்கலாம்.

இந்த நகரம் பல்வேறு வம்சங்களின் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது, அவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பல நினைவுச்சின்னங்கள் மற்றும் கோவில்களை தனது எல்லைக்குள் கொண்டுள்ளது. திருச்சியில் முக்கியமாக பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்களுள் புகழ்பெற்ற மலைக்கோட்டை மற்றும் பழமையான பாறையில் அமைக்கப்பட்ட சிவன் கோவில் ஆகியவை அடங்கும். 273 அடி உயர மலைப்பாறையில் அமைந்துள்ள, கோட்டையில் உச்சி பிள்ளையார் கோவில் மற்றும் தாயுமானசுவாமி கோவில் என இரண்டு இந்து கோவில்கள் உள்ளன. அதன் உச்சத்தில் இருந்து நீங்கள் திருச்சி மாநகரின் பறந்து விரிந்த அழகை கண்டு ரசிக்க முடியும்.

வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள்:

திருச்சியில் உள்ள மற்றொரு முக்கிய சிறப்பு திராவிட கட்டடக்கலை பாணியிலான ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில் ஆகும். மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரபலமான திருக்கோவில்களில் இதுவும் ஒன்று. ஆசியாவிலேயே பெரிய கோவில் என்ற சிறப்பை பெரும் ரங்கநாதர் கோவில் ஏழு பெரிய பிரகாரங்களுடன் காணப்படுகிறது. இந்த கோவிலை முழுமையாக சுற்றிப்பார்க்க சுமார் ஒரு நாள் கூட ஆகலாம். கோவிலுக்குள் கலையம்சம் பொருந்திய பல சிற்பங்கள் மற்றும் மண்டபங்களை காண முடியும். இங்கு நடைபெறும் மார்கழி உற்சவத்தின் பொது நம்பெருமாளை நடைபெறும் அரையர் சேவை மிகவும் சிறப்பு பெற்றது. வைகுண்ட ஏகாதசி அன்று இங்கு நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு விழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். அன்று இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பது சிறப்பம்சம் ஆகும்.

திருச்சி மாநகரில் உள்ள அடுத்த வரலாற்று சிறப்புமிக்க இடம் திருவானைக்கோவில் (Tourist spots in and around trichy) . இதுவும் மிகவும் பிரம்மாண்டமாக அமையப்பெற்றுள்ள இந்து கோவில் ஆகும். இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குகிறது. இதை கோவிலை சுற்றிப்பார்க்கவும் குறைந்தது மூன்று மணி நேரம் வரை ஆகலாம். இங்கும் கண்ணைக்கவரும் சிற்பங்கள், எண்ணற்ற கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபங்கள் ஆகியவை இருக்கின்றன. இதுதவிர திருச்சிக்கு அருகில் உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோவில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில், திருப்பட்டூர் கோவில், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், உத்தமர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், குணசீலம் பெருமாள் கோவில், கோவிலடி பெருமாள் கோவில், வயலூர் முருகன் கோவில் ஆகிய எண்ணற்ற கோவில்களை தரிசிக்கலாம்.

திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள மற்ற சுற்றலா தலங்கள்: (Best tourist spots in trichy)

திருச்சியில் கோவில்கள் தவிர சிறந்த பொழுது அம்சங்களுடன் கூடிய பல்வேறு சுற்றுலா தலங்கள் அமையப்பெற்றுள்ளன. அவற்றுள் காவிரி ஆற்றில் அமையப்பெற்றுள்ள முக்கொம்பு அணைக்கட்டு, கல்லணை அணைக்கட்டு, கொள்ளிடம் ஆற்றுப்பாலம், புளியஞ்சோலை நீர் வீழ்ச்சி, ஆகாச கணக்கை நீர் வீழ்ச்சி, கொல்லிமலை ஆகியவை சிறப்பு பெற்றது. இது தவிர பொழுது போக்கு அம்சங்களை வழங்கும் திரையரங்கங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகிய இடங்களும் இங்கு அதிகளவில் உள்ளது. மேலும் இங்கு அரசு அருங்காட்சியகம், ரயில்வே மியூசியம் மற்றும் நவீன கோளரங்கத்துடன் கூடிய அண்ணா அறிவியல் மையம் ஆகியவையும் அமையப்பெற்றுள்ளது.

திருச்சியில் ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற இடங்கள்:

திருச்சியில் ஷாப்பிங் செய்வதற்கு ஏராளமான விருப்பங்கள் உள்ளன. இங்கு ஷாப்பிங் செய்வது ஒரு அற்புதமான அனுபவம். நீங்கள் திருச்சியில் தங்கியிருக்கும் போது, திருச்சியில் உள்ள தில்லைநகர், மலைக்கோட்டை பகுதி கடைவீதிகளில் ஷாப்பிங் செல்லலாம் (shopping spots in trichy). மரச்சாமான்கள் உட்பட தமிழ்நாட்டின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் திருச்சியில் ஏராளமாகக் கிடைக்கின்றன. மூங்கில், கரும்பு, புற்கள், நாணல் மற்றும் இழைகளால் ஆன கூடைகள் மற்றும் பாய்கள் நியாயமான விலையில் கிடைக்கின்றன.

இங்கு ஷாப்பிங் செய்யும் போது நீங்கள் தமிழ்நாட்டின் சிறந்த கைவினைப்பொருட்கள், கவரிங் நகைகள், உலோக பொருட்கள், ஓவியங்கள், மட்பாண்டங்கள் மற்றும் கல் வேலைப்பாடுகள் ஆகியவற்றை காணலாம். மேலும் இங்கு அரசு நடத்தும் எம்போரியா, தனியார் கடைகள் மற்றும் உள்ளூர் பஜாரில் சிறு சிறு கடைகள் செயல்படுகின்றன. மாலையில், திருச்சியில் பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு அருகில் அமைக்கப்பட்ட உள்ளூர் சாலையோரக் கடைகளில் உங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கலாம்.

திருச்சியில் ஷாப்பிங் செய்வதற்கு சில சிறந்த இடங்களாக பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி, தில்லைநகர் மற்றும் மலைக்கோட்டை பகுதிகள் விளங்குகின்றன. இரவு நேரங்களில் இந்த பகுதியில் ஷாப்பிங் செல்லும் பொது வண்ணமயமான பல்வேறு கலைப்பொருட்கள் மற்றும் பயன்பாட்டு பொருட்களை காட்சிப்படுத்தும் துடிப்பான கடைகள் மற்றும் தெருக்களில் நன்கு ஒளிரும் மின்விளக்கு அலங்காரங்கள் மற்றும் மக்கள் கூட்டத்தை காணமுடியும்.

சின்ன கடை வீதி ஷாப்பிங்:

உச்சி பிள்ளையார் கோவில் அமையப்பெற்றுள்ள மலைக்கோட்டையின் அடிவாரத்தில் உள்ள “தெப்பக்குளம்” சுற்றியுள்ள பகுதி தான் சின்ன கடை வீதி என்று அழைக்கப்படுகிறது. இது திருச்சி மாநகரின் முக்கிய ஷாப்பிங் செய்யும் மையமாக விளங்குகிறது. இந்த சின்னக்கடை வீதியில் ஆடைகள், நகைகள் வாங்க எண்ணற்ற கடைகளும், சிறந்த உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க உதவும் கடைகளும் நிரம்பி காணப்படுகின்றன.

ஆடை ஷாப்பிங்கிற்கான மிகவும் பிரபலமான கடைகள்:

சாரதாஸ் – பட்டு புடவைகள் மற்றும் ஆடைகள் வாங்க புகழ்பெற்ற மிகப்பெரிய பழைய கடை. இங்கு மலிவான மற்றும் சிறந்த தரத்தில் ஆடைகள் வாங்கலாம்.

கிருஷ்ணா ரெடிமேட் ஹால் – இந்த கடையில் கடை ரெடிமேட் சல்வார் முதல் மேற்கத்திய உடைகள் வரை அனைத்து ஆயத்த ஆடைகளும் கிடைக்கும்.

லட்சுமி சில்க்ஸ் – உச்சி பிள்ளையார் கோவிலுக்கு அப்பால் உள்ள தெருவில், திருமண புடவைகள் வாங்க சிறந்த இடமாக திகழ்கிறது.

சென்னை சில்க்ஸ் – தமிழ்நாட்டின் அனைத்து பிரபலமான மாநகரங்களிலும் கிளைகளை கொண்டு செயல்படும் சென்னை சில்க்ஸ் திருச்சியிலும் ஆடைகள் வாங்க சிறந்த இடமாக விளங்குகிறது.

பாரம்பரிய நகைகள் வாங்க சிறந்த கடைகள்:

மங்கள் & மங்கள்- நகைகளின் சிறந்த தொகுப்பு கொண்ட பழைய கடை.

கோபால்தாஸ் – நல்ல தரமான, பாரம்பரிய வடிவமைப்புகளுடன் கூடிய நகைகளை கொண்ட பாரம்பரியமான கடை.

சம்பத் நகை வியாபாரிகள் – தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்க சிறந்த கடை.

ஸ்ரீ லக்ஷ்மி கிரியேஷன்ஸ் – இயற்கை வைரங்கள் மற்றும் வைர நகைகள், பாரம்பரிய நகைகள் மற்றும் வண்ண ரத்தினக் கற்கள் ஆகியவற்றின் தொகுப்பை கொண்ட சிறந்த கடை.

திருச்சிராப்பள்ளி மாநகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் விருப்படி ஷாப்பிங் செய்து கொள்ள பல இடங்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எளிதாக வாங்கிவிட முடியும்.

தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக தரம் உயர்த்தும் அளவிற்கு எண்ணற்ற சிறப்புகளையும், வசதிகளையும், பெருமைகளையும் பெற்ற திருச்சிராப்பள்ளி மாநகரம் (travel guide for trichy) சுற்றுலா பயணிகளுக்கும் சிறந்த புகலிடமாக விளங்குகிறது. ஒரே இடத்தில் தங்கியிருந்தபடியே பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட விரும்பும் பயணிகளுக்கு திருச்சி ஒரு சிறந்த இடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a Reply